கதிர்காமம் முருகன்: இலங்கையின் புனித தலம் மற்றும் வரலாறு

கதிர்காமம் முருகன் திருக்கோயில் இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாகும். ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில், முருக பக்தர்களின் இதயங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு முருகனுக்கு சிலை இல்லாத வழிபாட்டு முறை மற்றும் தனித்துவமான பாரம்பரியங்கள் பக்தர்களை கவர்ந்திழுக்கின்றன.

கதிர்காமம் முருகன்

கதிர்காமம் முருகன் வரலாறு

முருகப் பெருமான் சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து அவதரித்தவர். இத்தலத்தில் வள்ளி அம்மையுடன் காதல் மணம் புரிந்ததால் இந்த இடம் ி (கதிர் + காமம்) என்று பெயர் பெற்றது. முருகன் தனக்கு மிகவும் பிடித்த இடமாக இதனைத் தேர்ந்தெடுத்து இங்கு எழுந்தருளியதாக புராணங்கள் கூறுகின்றன.

மற்றொரு கதையின்படி, சூரபத்மனை வதம் செய்யும் பொருட்டு முருகன் இங்கு வந்தார். மாணிக்க கங்கை நதியின் அருகில் பாசறை அமைத்து போர் புரிந்து வெற்றி பெற்ற பின்னர், நவகங்கைத் தீர்த்தத்தை உருவாக்கி தேவர்களுடன் இங்கு தங்கினார் என்பது வரலாறு.

சிங்கள மன்னன் துட்டகெமுனு, தமிழ் மன்னன் எல்லாளனை வெல்ல வேண்டி கதிர்காம முருகனிடம் வேண்டுதல் வைத்து விரதம் இருந்தான். வெற்றி பெற்ற பின்னர் சுமார் 2100 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலை நிர்மாணித்ததாக கூறப்படுகிறது.

தனித்துவமான வழிபாட்டு முறை

கதிர்காம முருகன் கோயிலின் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால், கருவறையில் முருகன் சிலை இல்லை என்பதுதான். பக்தர்கள் காண முடியாத பெட்டிக்கு பூஜை நடைபெறுகிறது. கப்புறாளைமார் என்ற சிங்கள பூசாரிகள் தங்கள் வாயைத் துணியால் கட்டி, திரைக்கு பின்னால் நின்று வழிபாடு செய்கின்றனர். இவர்கள் தங்களை வள்ளியின் வழித்தோன்றல்கள் என்று கருதுகின்றனர்.

கோயிலில்:
  • முருகன் சன்னதி தெற்கு நோக்கி
  • வள்ளி சன்னதி வடக்கு நோக்கி எதிரெதிராக அமைந்துள்ளன. வண்ணத் திரைக்கு பின்னால் வள்ளி-தெய்வானை உடன் முருகன் ஓவியம் உள்ளது.
விநாயகர், பெருமாள், தெய்வானை சன்னதிகளும் இங்கு தரிசனம் தருகின்றன.
பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடன்கள்

  • காவடி எடுத்தல்
  • கற்பூரச் சட்டி எடுத்தல்
  • அங்கப்பிரதட்சணம்
  • தேங்காய் உடைத்தல்
  • தீ மிதித்தல்
  • கதிர்காம மலையில் கிடைக்கும் வெண்ணிறக் கட்டியை திருநீறாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர். அருணகிரிநாதர் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
  • எப்படி செல்வது?
    • கொழும்பு முதல்: சுமார் 280 கி.மீ.
    • கண்டி முதல்: சுமார் 210 கி.மீ.
    • திறக்கும் நேரம்: அதிகாலை 4:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை.
    • விசேஷ தினங்கள்: வைகாசி விசாகம், ஆடி அமாவாசை, திருக்கார்த்திகை, தைப்பூசம், மாசிமகம்.
  • அருகிலுள்ள தலங்கள்
  • சீதாஎலியா சீதையம்மன் கோயில் (140 கி.மீ.) – தம்பதியர் ஒற்றுமைக்கு சிறப்பான தலம்.
  • கதிர்காம முருகன் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு மன அமைதி, தைரியம் மற்றும் வாழ்க்கைத் தடைகள் நீங்கும் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இலங்கைக்கு செல்லும் முருக பக்தர்கள் இத்தலத்தை தவறாமல் தரிசிக்க வேண்டும்.
  • கதிர்காமம் முருகன் | கதிர்காம முருகன் வரலாறு | இலங்கை முருகன் கோயில் | கதிர்காம சுவாமி – இந்த புனித தலத்தைப் பற்றி மேலும் அறிய இக்கட்டுரை உதவும்.
  • Powered by Blogger.