பைரவ மூர்த்தியை வழிபட உகந்த தியான ஸ்லோகம்

சிவபெருமானிடம் இருந்து வெளிப்பட்ட பைரவர், சிவபெருமானைப் போன்றே மூன்று கண்களைக் கொண்டவர். நம்முடைய பயத்தையெல்லாம் போக்குபவர் என்பதால் பைரவர் என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றன ஞானநூல்கள்.

பைரவ மூர்த்தி



ரக்தஜ்வால ஜடாதரம் சசிதரம்

ரக்தாங்க தேஜோமயம்

டக்கா சூல கபால பாசகதரம்

ரக்ஷாகராம் பைரவம்

நிர்வாணம் ஸுநவாஹனம்

த்ரிநயனஜ் சாநந்த கோலாஹலம்

வந்தே பூதபிசாச நாதவடுகம்

க்ஷேத்ரஸ்ய பாலம் சுபம்


இதன் கருத்து சிவந்த ஜுவாலைகளைக் கொண்ட சடையை தரித்திருப்பவரும், சந்திரனை முடியில் தரித்திருப்பவரும், சிவந்த மேனியராகத் திகழ்பவரும், ஒளிமயமாக விளங்குபவரும், உடுக்கை சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றை வைத்திருப்பவரும், உலகத்தை காப்பவரும்,

பாவிகளுக்கு பயங்கரமான தோற்றத்தைக் காட்டுபவரும், நிர்வாணமாக இருப்பவரும், நாயை வாகனமாகக் கொண்டவரும், மூன்று கண்களைக் 
கொண்டவரும், எப்போதும் ஆனந்தத்தினால் மிகுந்த கோலாகலம் கொண்டவரும், பூத கணங்கள் பிசாசுக் கூட்டங்கள் ஆகியவற்றுக்குத் 
தலைவனாக இருப்பவரும், க்ஷேத்திர பாலகருமான பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.

இந்த ஸ்லோகத்தை தினமும் காலையும் மாலையும் சொல்லிவரலாம். அதேபோல



ஓம் கால காலாய வித்மஹே

கால தீத்தாய தீமஹீ

தந்நோ கால பைரவ பிரசோதயாத்

என்னும் பைரவ காயத்ரி மந்திரத்தையும் சொல்லி வழிபடலாம்.

பைரவர் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே செல்லும்போது வழியில் பயமில்லை என்பது ஆன்றோர் வாக்கு.

இந்த ஆண்டு காலபைரவாஷ்டமி நாளை கொண்டாடப்படுகிறது. எனவே நாளை குறைந்தபட்சம் சிவப்பு நிற மலர்களையேனும் பைரவருக்கு சாத்தி
சகல நன்மைகளையும் பெறலாம்.
Powered by Blogger.