சிவதூதி ஸ்லோகம்

 புஷ்கரம் என்றழைக்கப்படும் ஷேத்திரத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு சிவ தூதி என்ற பெயர். இந்த ஸ்லோகத்தை கூறி அம்பாளை வணங்கி வந்தால் நன்மை கிடைக்கும்.

அம்மன்

ஆபத்துகள் வராமல் தடுக்கும் சிவதூதி ஸ்லோகம்

புஷ்கரம் என்றழைக்கப்படும் ஷேத்திரத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு சிவ தூதி என்ற பெயர். அம்பாள் நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப-நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்கும் முன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூரிய ஒளிபோல் மின்னுகிறது.

நவரத்தினங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். இந்த அம்பாளை பின் வரும் ஸ்லோகம் உச்சரித்து பூஜித்து வந்தால் தம்மை எதிர்வரும் ஆபத்துகள் விலகி செல்லும்.


ஓம் சிவதூத்யை வித்மஹே

சிவங்கர்யை தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்


இந்த ஸ்லோகத்தை கூறி அம்பாளை வணங்கி வந்தால் நன்மை கிடைக்கும்.

Powered by Blogger.