சுக்லாம்பரதரம் சொல்லும் போது செய்ய வேண்டியவை

சுக்லாம்பரதரம் சொல்லும் போது செய்ய வேண்டியவை || Suklam Baradharam

 இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம்.


Vinayagar

எந்த ஒரு விஷயத்துக்கும் ஆரம்பத்தில் ‘சுக்லாம்பரதரம்’ சொல்வோம். இதற்கு விநாயகர் அவர் எல்லாமுமாக இருக்கிறார் என்பது பொருள். அந்த ஸ்லோகத்தை சொல்லி பாருங்கள் தெரியும்.

 சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்

ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

‘சுக்லாம்பரதர’ - வெள்ளை வஸ்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.

‘விஷ்ணு’ என்றால் எல்லா இடத்திலேயும் பரவியிருப்பவர். ‘சசிவர்ண’- நிலா மாதிரி நிறம் உடையவர்-.

‘சதுர்புஜ’ - நான்கு கை உள்ளவர்.

‘ப்ரஸந்த வதந’- நல்ல மலர்ந்த முகமுள்ளவரான இவரை தியானிக்க வேண்டும் என்று வருகிறது. இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம்.

மனித உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் என ஏழு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் சுவாச நடப்பு நடக்கிறது. மேலும் சிரசில் இருக்கும் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்புகளின் வழியே சுவாசத்தோடு பாய்வதற்சாகவே சிரசில் குட்டிக் கொள்கிறோம்.

Powered by Blogger.