கல்யாண வரம் கைகூட சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கல்யாண வரம் கைகூட சொல்ல வேண்டிய ஸ்லோகம் || Marriage slokas

ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரம் தரக்கூடிய அற்புதமான ஸ்லோகம் இது!

வாழ்க்கையை தி.மு. என்றும் தி.பி. என்றும் பிரித்துப் பார்க்கிறவர்கள் நாம். அதாவது திருமணத்துக்கு முன்; திருமணத்துக்குப் பின்! திருமணம் என்பது ஆணுக்குப் பெண் துணை என்றும், பெண்ணுக்கு ஆண் பாதுகாப்பு என்றும் கட்டமைப்பு கொண்டதாக அமைந்துள்ளது.

பூஜை

அதேபோல், திருமணம் என்பது வாழையடி வாழையாக சந்ததி வளர்க்கும் விஷயமாகவும் சாஸ்திரங் கள் தெரிவிக்கின்றன. இங்கே... 'நம்ம பொண்ணுக்கு இன்னும் கல்யாண வரன் தகையலையே...’, 'கை நிறைய சம்பளம் வாங்கி என்ன புண்ணியம். என் புள்ளைக்கு கல்யாண ராசி இன்னும் வரலை’ என்று வருத்தப்படுகிற பெற்றோர்கள் நம் உலகில் உண்டு. ஒரு பெற்றோரின் மிகப்பெரிய கவலையும் துக்கமும் தங்கள் வாரிசுக்குத் திருமணம் நடக்கவில்லையே என்பதாகத்தான் இருக்கும்.

ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரம் தரக்கூடிய அற்புதமான ஸ்லோகம் இது!

காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:

காம விஹாராய காம ரூபதராய ச

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே

மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:

வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்!

Powered by Blogger.