குபேர சம்பத்துக்களை பெற உதவும் விஷ்ணு காயத்ரி மந்திரம்

குபேர சம்பத்துக்களை பெற உதவும் விஷ்ணு காயத்ரி மந்திரம் || Vishnu gayatri Mantra

வைணவ சமயத்தில் மந்திரங்கள் மூன்று வகையாக உள்ளன. அவை, அஷ்டாச்சரம் (எட்டெழுத்து), துவய மந்திரம் (சரணாகதி), சரமஸ்லோகம் என்பன. இவற்றில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரம் மிகவும் முக்கியத்துவம்


Vishnu Gayathri Mantra


விஷ்ணு என்பதற்கு எங்கும் நிறைந்திருப்பவன் என்று பொருள். விஷ்ணுவுக்கு நாராயணன் என்ற பெயரும் உண்டு. ‘நாரம்’ என்றால் ‘வெண்ணிற நீர்’, ‘அயனம்’ என்றால் ‘இடம்’ என்று அர்த்தம். வெண்மை நிற பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டவன் என்பதால் ‘நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார். வைணவ சமயத்தில் மந்திரங்கள் மூன்று வகையாக உள்ளன. அவை, அஷ்டாச்சரம் (எட்டெழுத்து), துவய மந்திரம் (சரணாகதி), சரமஸ்லோகம் என்பன. இவற்றில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரம் மிகவும் முக்கியத்துவம்

விஷ்ணு காயத்ரி மந்திரம் : 

ஓம் நாராயணாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி, தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

பரம்பொருளான நாராயணனை அறிவோம். வாசுதேவன் மீது தியானம் செய்வோம். விஷ்ணுவாகிய அவன் நம்மை காத்து அருள் செய்வான் என்பது இதன் பொருளாகும். விஷ்ணுவை வழிபடும் போது, தினமும் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வரலாம். இந்த மந்திரத்தைச் சொல்வதால், ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். உலக இன்பங்களை அனுபவிக்கலாம். மறுபிறவி நல்லவிதமாக அமையும். பாவங்கள் அகலும். நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள்.

விஷ்ணு காயத்ரி மந்திரம்: ஓம் நிரஞ்சனாய வித்மஹே, நிராபாஸாய தீமஹி, தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத். – விஷ்ணு பகவானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதால் நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும்; லாபம் பெருகும், வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கும். அதோடு வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்.

Powered by Blogger.