முழு முதற் கடவுளே போற்றி

முழு முதற் கடவுளே போற்றி || Vinayagar Slokas

மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல வானுலகில் வாழும் தேவர்களும் தங்களின் எந்த ஒரு காரியமும் சிறப்பான வெற்றியடைய அனைத்து லோகங்களுக்கும் நாயகனாகிய விநாயகப்பெருமானையே வழிபடுகின்றனர்.


Vinayaga Slokas




“அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம்

நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்

 மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்”.


மிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் மூல மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் துதித்து வழிபடலாம். மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள்ளாக, வீட்டில் இருக்கும் கணபதி படத்திற்கு பூக்களை சாற்றி, தூபங்கள் கொளுத்தி, கொழுக்கட்டை அல்லது லட்டு இனிப்புகளை நிவேதனம் வைத்து, விநாயகருக்கு நேராக அமர்ந்து கொண்டு இம்மந்திரத்தை 108 அல்லது 1008 முறை கூறி வழிபட வேண்டும். இதன் பலனாக உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய ஒவ்வொன்றும் உங்களுக்கு கிடைக்க தொடங்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையேயான ஒற்றுமை ஓங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவர். கண் திருஷ்டி நீங்கும். நோய்கள் அகலும். செல்வம் அதிகளவில் சேர துவங்கும்.

Powered by Blogger.