தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரம்

பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் வடிவாக தோன்றியவர் ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆவார். அவருக்குரிய ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரம் இது.

ஓம் திகம்பராய வித்மஹே
யோகாரூடாய தீமஹி
தன்னோ தத்தஹ ப்ரசோதயாத்

மும்மூர்த்திகளின் அம்சமான ஸ்ரீ தத்தாத்ரேயர் கூறிய காயத்திரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் அதிகாலை வேளையில் 27 முறை துடிப்பது நன்மைகளைத் தரும். வியாழக்கிழமைகளில் காலையில் குரு பகவான் சன்னிதியில் குரு பகவானுக்கு மஞ்சள் நிறப் பூக்களை சமர்ப்பித்து, இந்த மந்திரத்தை 108 முதல் 1008 முறை துதித்து வழிபடுவதால் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூன்று தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்கும். வாழ்வில் துரதிருஷ்டங்களும், தரித்திரங்களும் நீங்கி பல யோகங்கள் ஏற்படும். மனக்குழப்பங்கள் நீங்கி சித்தம் தெளிவு பெறும்.


தத்தாத்ரேயர்



படைத்தல் தொழிலை பிரம்மா, காத்தல் தொழிலை விஷ்ணு, அழித்தல் தொழிலை சிவன் ஆகிய மூன்று தொழில்களையும் இந்த மும்மூர்த்திகள் செய்து உலகின் சமநிலையை காக்கின்றனர். இந்த மும்மூர்த்திகளின் அம்சமாக பூமியில் பிறந்தவர்தான் ஸ்ரீ தத்தாத்ரேயர். மனிதர்களுக்கு உயரிய ஞானத்தை போதிக்கும் ஞான குருவாக இருந்தவர். அவருக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை துதித்து ஜெபிப்பவர்களுக்கு ஒருபோதும் தீமைகள் நேராது.

Powered by Blogger.