அனைத்து துயரங்களுக்கும் பரிகார காயத்ரி மந்திரங்கள் | Gayatri Mantras of all gods for problems Tamil

எல்லா தெய்வங்களின் காயத்ரி மந்திரம் Gayatri Mantras all gods

சப்த சிரஞ்சீவிகள், 27 நட்சத்திரங்கள், மகாலட்சுமி கடாக்ஷம் கிடைக்க, கடன் தொல்லை நீங்க, அஷ்ட சித்திகளை பெற, சகல காரியங்களும் சித்தி பெற, சகல தோஷங்கள் விலக, வாஸ்து தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய , புத்தி, பலம், தைரியம் பெருக, மன சாந்தி பெற, கணவன், மனைவி ஒற்றுமை பெற, சிவபெருமான் அருள் கிடைக்க, சகல நோய்களும் குணமடைய, மும்மூர்த்திகளின் அருள் கிடைக்க, உடல் நலத்துடன் ஆயுளும் பெருக மற்றும் இது போன்ற பல நன்மைகள் கிடைக்க காயத்ரி மந்திரங்கள் இந்த பதிவின் கீழே உள்ளது…

ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.

24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும்.


அனைத்து துயரங்களுக்கும் பரிகார காயத்ரி மந்திரங்கள்


இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.

இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.

காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.

தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:

யோ -எவர்
ந -நம்முடைய
தியோ -புத்தியை
தத் -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ
தேவஸ்ய -ஒளிமிக்கவராக
ஸவிது -உலகைப் படைத்த
வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான
பர்கோ -சக்தியை
தீமஹி -தியானிக்கிறோம்

நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.

அம்மன் காயத்ரி மந்திரம் (சகல காரியங்கள் வெற்றி அடைய காயத்ரி மந்திரம்)

ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனஹ் ப்ரசோதயாத்

துர்கை காயத்ரி மந்திரம்
(ராகுதோஷ நிவர்த்திக்காக காயத்ரி மந்திரம்)

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்

ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

அன்னபூரணி தேவி காயத்ரி மந்திரம்
(நித்தியான்ன பிராப்திக்காக காயத்ரி மந்திரம்)

ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்

சிவதூதி காயத்ரி மந்திரம்

ஓம் சிவதூத்யை ச வித்மஹே
சிவங்கர்யைச தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

பாலா காயத்ரி மந்திரம்

ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்னோ பாலா ப்ரசோதயாத்

அம்ருதேஸ்வரி தேவி காயத்ரி மந்திரம்
(ஆயுள் ஆரோக்கியம் பெற காயத்ரி மந்திரம்)

ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
சக்தீஸ்வரீ ச தீமஹி
தன்னோ அம்ருத ப்ரசோதயாத்

வாக்பலா காயத்ரி மந்திரம்
(பேச்சுபிழை சரியாக காயத்ரி மந்திரம்)

ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே
வாக்பவேஸ்வரீ தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்

சர்வமங்கள காயத்ரி மந்திரம்
(நல் பயணத்திற்கு காயத்ரி மந்திரம்)

ஓம் சர்வமங்களை வித்மஹே
மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்

(மாங்கல்ய பிராப்தம் கிடைக்க காயத்ரி மந்திரம்)

ஓம் பாலாரூபிணி வித்மஹே
பரமேஸ்வரி தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே
கந்யாரூபிணீ தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்

காமேச்வரி காயத்ரி மந்திரம்
(மங்களம் உண்டாக காயத்ரி மந்திரம்)

ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே
காமேச்வர்யை தீமஹி
தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லிந்நாய தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

காமதேனு காயத்ரி மந்திரம்
(கேட்டது கிடைக்க காயத்ரி மந்திரம்)

ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ரை ச தீமஹி
தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்

காளிகா தேவி காயத்ரி மந்திரம்
(கேட்ட வரம் கிடைக்க காயத்ரி மந்திரம்)

ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

வாராஹி காயத்ரி மந்திரம்
(நினைத்தது நிறைவேற காயத்ரி மந்திரம்)

ஓம் வராஹமுகி வித்மஹே
ஆந்த்ராஸனீ தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்

குலசுந்தரி காயத்ரி மந்திரம்
(சொத்துகவுரவம் அடைய காயத்ரி மந்திரம்)

ஓம் குலசுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

சந்தோஷி மாதா காயத்ரி மந்திரம்
(திருமண தடை நீங்க காயத்ரி மந்திரம்)

ஓம் ருபாதேவீ ச வித்மஹே
சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்

கவுமாரி தேவி காயத்ரி மந்திரம்
(சக்தி பெற காயத்ரி மந்திரம்)

ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்

கவுரிதேவி காயத்ரி மந்திரம்
(தியானம் சித்தி அடைய காயத்ரி மந்திரம்)

ஓம் சுவபாகாயை வித்மஹே
காம மாளினை தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் கணாம்பிகாய வித்மஹே
மஹாதபாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் சௌபாக்யதாயை வித்மஹே
காம மாலாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் ஸோஹம்ச வித்மஹே
பரமஹம்ஸாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

கங்காதேவி காயத்ரி மந்திரம்
(ஞாபக சக்தி பெற காயத்ரி மந்திரம்)

ஓம் த்ரிபதகாமினி வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கங்கா ப்ரசோதயாத்

சாமுண்டி காயத்ரி மந்திரம்

ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்

ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
சக்ரதாரிணி தீமஹி
தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்

சித்ரா காயத்ரி மந்திரம்
(கலைகளில் தேர்ச்சி பெற காயத்ரி மந்திரம்)

ஓம் ஸ்ரீசித்ர்யை ச வித்மஹே
மஹாநித்யை ச தீமஹி
தன்னோ நித்ய ப்ர சோதயாத்

சின்னமஸ்தா காயத்ரி மந்திரம்
(எதிரிகளை வெல்ல காயத்ரி மந்திரம்)

ஓம் வைரேசான்யை ச வித்மஹே
சின்னமஸ்தாயை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

சண்டீஸ்வரி காயத்ரி மந்திரம்
(நவகிரக தோஷங்கள் விலக காயத்ரி மந்திரம்)

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவீ ச தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்

ஓம் அப்ஜஹஸ்தாய வித்மஹே
கௌரீஸித்தாய தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்

ஜெயதுர்கா காயத்ரி மந்திரம்
(வெற்றி கிடைக்க காயத்ரி மந்திரம்)

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
துர்காயை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஓம் நாராண்யை வித்மஹே
துர்காயை ச தீமஹி
தன்னோ கேணீ ப்ரசோதயாத்

ஜானகிதேவி காயத்ரி மந்திரம்
(கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க காயத்ரி மந்திரம்)

ஓம் ஜனகனாயை வித்மஹே
ராமபிரியாய தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

ஓம் அயோநிஜாயை வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

Powered by Blogger.