ஸ்ரீ கணபதி சஹஸ்ர நாம ஸ்லோகங்களும் பலன்களும்

ஸ்ரீ கணபதி சஹஸ்ர நாம ஸ்லோகங்களும் பலன்களும் || ganesha sahasranama

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது. அதைத் தினமும் கூற முடியாதவர்கள் ,சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.


ஸ்ரீ கணபதி சஹஸ்ர நாம ஸ்லோகங்களும் பலன்களும்



காரியத்தடைகள் நீங்க:-


மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன  

ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன 

இதைத் தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கும்.ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் இந்த ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் துவங்க வெற்றி உண்டாகும்.

எதிரிகளால் துன்பம் நேராமல் இருக்க:-

வஜ்ராத்யஸ்த்ர பரீவார:கனசண்ட ஸமாஸ்ரய  
ஜயோஜய பரீவார :விஜயோ விஜயாவஹ  

இதைத் தினமும் 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம் செய்து ஜெபித்து வர எதிர்ப்புகள் ,எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.

கல்வியில் முன்னேற்றம் உண்டாக :-

சரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரி நந்தன ஸ்ரீ நிகேதன
குருகுப்த பதோ வாசா சித்தோ வாகீஸ்வரேச்வர

இதைத் தினமும் 18 தடவை கிழக்கு நோக்கி அமர்ந்து கல்வி,கலைகளில் உயர்வுபெற வேண்டிச் சங்கல்பம் செய்து ஜெபித்து வர நல்ல முன்னேற்றம் உண்டாகும்.


செல்வம் பெருக,தியானம் சித்திக்க :-

தனதான்யபதிர் தந்யோ தனதோ தரணீதர 
த்யானைக பிரக்டோ த்யேய :த்யாநோ த்யான பராயண

இதைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறை செல்வமும் ,ஆன்மீக,தியான நிலையில் உயர்வும் கிட்டும் .

நாகதோஷம் நீங்க,புத்திர ப்ராப்தி உண்டாக :-

ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரத்னமௌளிர் நிரங்குஸ
ஸர்ப்பஹார கடீசூத்ர : சர்ப்ப யக்ஞோபவீதவாந் 
ஸர்ப்பகோடீர கடக: சர்ப்ப க்ரைவேய காங்கத
ஸர்ப்ப கக்ஷோதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக
சர்வ வஸ்யகரோ கர்ப்பதோஷஹா புத்ரபௌத்ரத

இந்த ஸ்லோகத்தைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர சர்ப்பதோஷம் நீங்கும்.சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் உண்டானால் அது விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.இதை அரசமரமும்,வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ஜெபிக்க நிறைவான பலன் கிடைக்கும்.

வழக்குகள்,எதிர்ப்புகளை வெல்ல:-

மேதாத :கீர்த்தித:சோகஹாரி தௌர்பாக்ய நாசன 
பிரதிவாதி முகஸ்தம்ப: துஷ்ட சித்த பிரசாதன

வாக்குவாதம்,வழக்குகளுக்குச் செல்லும் பொழுது இந்த ஸ்லோகத்தை 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து குங்குமம் அணிந்து செல்ல வெற்றி கிடைக்கும்.

கிரக தோஷ பாதிப்புகள் விலக :-

ராசிஸ் தாரா திதிர் யோக : வார :காரண அம்சக
லக்னோ ஹோரா காலசக்ரோ மேரு :சப்தர்ஷயோ த்ருவ 
ராஹூர் மந்த:கவிர் ஜீவ :புதோ பௌம சசீ ரவிஹி 
கால: ஸ்ருஷ்டி :ஸ்திதிர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோ ஜகத் 

இந்த ஸ்லோகத்தை 27 தடவை வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர கிரகதோஷம் நீங்கும்.

Powered by Blogger.