செஞ்ச பாவமெல்லாம் தீர மனமுருகி இதைச் சொல்லுங்க

செஞ்ச பாவமெல்லாம் தீர மனமுருகி இதைச் சொல்லுங்க || saying this slokas

சிவந்த திருக்கரங்களை உடையவள். சகல கலைகளையும் தந்தருளுபவள் . இவள் மயில் போன்ற அழகுடையவள். நுரை பொங்கப் பாய்ந்தோடும் கங்கை உதிக்கும் இடமான சடாமுடியை கொண்ட பரமனின் இடப்பாகத்தை தனதாக்கி கொண்டவள்.


God Vidyha Devi


மங்கலை செங்கலை ,சம்முலையாள், மலையாள் வருணச்

சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவுகங்கை

பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்

பிங்கலை நீலி செய்யாள், வெளியாள் பசும்பெண் கொடியே!


பொருள்

அன்னை அபிராமி என்றுமே மங்கலத்தை தருபவளாக இருக்கிறாள். செம்மையான கலசம் போன்ற தனங்களை உடையவளே. இவளே மலைமகளாய் பிறந்தவள். வெண் சங்கு போன்ற வளையல்களை அணியப்பெற்றவள். சிவந்த திருக்கரங்களை உடையவள். சகல கலைகளையும் தந்தருளுபவள் . இவள் மயில் போன்ற அழகுடையவள். நுரை பொங்கப் பாய்ந்தோடும் கங்கை உதிக்கும் இடமான சடாமுடியை கொண்ட பரமனின் இடப்பாகத்தை தனதாக்கி கொண்டவள். பொன் நிறம் படைத்த பிங்கலை. நீல நிறத்தினை உடைய காளி. செந்நிறம் உடைய லலிதாம்பிகை. வெண்ணிறம் படைத்த வித்யா தேவி இவள். பச்சை நிறம் உடைய உமா தேவி.

Powered by Blogger.