தொழிலில் தொடர் நஷ்டம் வராமல் தடுக்கும் ஸ்லோகம்

தொழிலில் தொடர் நஷ்டம் வராமல் தடுக்கும் ஸ்லோகம் || slokas prevent loss of business

சிலருக்கு எந்த தொழில் தொடங்கினாலும் அதில் தொடர் நஷ்டம் ஏற்படும். அவர்கள் தினமும் இந்த மந்திரத்தை பாராயணம் செய்தால், செய்யும் தொழிலில் விருத்தியும், லாபமும் அடையலாம்.


Durgai Amman


சிலருக்கு எந்த தொழில் தொடங்கினாலும் அதில் ஒரு சுனக்கம்,தொடர் நஷ்டம் ஏற்படும். அவர்கள் தினமும் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால், செய்யும் தொழிலில் விருத்தியும், லாபமும் அடையலாம்.

கட்கம் சக்ர கதேக்ஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர: 

சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம்

யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே ஹரௌ

நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மஹாகாளிகாம்

பொருள்:

தன் திருக்கரங்களில் சூலம், கதை, அம்பு, கத்தி, புசுண்டி, கொம்பு, கேடயம், வில், அறுத்த அசுரனின் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தியருளும் மகாதேவியே, காளியே, நமஸ்காரம். பத்து திருமுகங்கள், பத்து கால்கள், பத்து கைகள் கொண்டு ஒளிவீசும் தோற்றம் கொண்டவளே, நமஸ்காரம்

Powered by Blogger.